the Socialist.LK ஆசிரியர் குழுவின் அறிக்கை
தொழிலாளர்கள், தோழர்கள், நண்பர்கள்,
மார்ச் 11 அன்று வலைப்பதிவாகத் தொடங்கி புரட்சிகர அறிவை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்த TheSocialist.LK – Global Socialist Reviews என்ற இணைய வெளியீடு இன்று (25) இணையத்தளமாகத் தொடங்கப்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச தரநிலை வடிவத்தில் மேம்படுத்தப்பட்டு, அரசியல், பொருளாதாரம், வர்க்கப் போராட்டம், வரலாறு, கலை-கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பரந்த அளவிலான, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் அறிவைக் கொண்டு வர சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மும்மொழி இணையதளமாக தயார்படுதத்ப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமான இலங்கை மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும், சர்வதேசத்தால் வழிநடத்தப்படும் சோசலிசப் புரட்சிக்கு முறையாகப் பயிற்றுவித்து அவர்களைத் தயார்படுத்தும் தளமாக theSocialist.LK இணையதளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். சுமார் இரண்டு மாதங்கள், வலைப்பதிவு மூலம், தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து சர்வதேச அரசியல்-பொருளாதார அனுபவத்தை உங்களுக்கு பகுப்பாய்வு ரீதியில் கொண்டு வர உழைத்தோம். இந்த குறுகிய காலத்தில் வெளியிடப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட கட்டுரைகளின் எண்ணிக்கை 66. நாளுக்கு நாள் அது பெற்ற வாசகர்களின் ஈர்ப்பு, ஊடுருவும் புதிய அறிவைத் தேடுவதற்கான புறநிலை உந்துதலுக்கு சாட்சியமளித்தது சமூக யதார்த்தமாகும். இது புரட்சிகர அரசியலுக்கு ஊக்கமளிக்கிறது.
தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் உண்மையான புத்திஜீவிகளுக்கு ஜனநாயக ரீதியாக விவாதிக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தை நசுக்க ஆயுதம் ஏந்திய முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்த்தாக்குதலைத் தயாரித்து ஒருங்கிணைக்கவும் சுதந்திரமான ஊடகங்கள் தேவை. . அவர்கள் கேட்பதற்கும், வினவுவதற்கும், தேடுவதற்கும், கண்டுபிடிப்பதற்கும், சொல்லவும் எழுதவும் நிறைய இருக்கிறது. உழைக்கும் மக்களின் போராட்டங்களின் ஒற்றுமைக்கு எது பொருத்தமானது என்பதை நம்பகத்தன்மையுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை. அந்த வகையில், theSocialist.LK என்பது வர்க்கத் தேவையின் விளைபொருளாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் WSWS ஆகியவற்றின் இயங்கியல் பொருள்முதல்வாத முறை, பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் theSocialist.LK, தேசிய மற்றும் சர்வதேச உழைக்கும் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமைக்காக நிற்கும். ஸ்டாலினிசத்தை முன்னிறுத்தி சந்தர்ப்பவாத அரசியலால் அழிக்கப்பட்ட சோசலிச கலாச்சாரத்தை மீட்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள உறுதியான வேலைத்திட்டத்திற்கு இணங்க அதன் பணியைத் தொடரக் கடமைப்பட்டுள்ளது.
பெரும் மந்தநிலைக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் ஆழமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏகாதிபத்திய அமைப்பு, மனிதகுலத்தை அணுசக்தி உலகப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோவால் தொடங்கப்பட்ட பினாமி யுத்தம். ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனமான பிரதிநிதித்துவம் ஆகும். உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த பொருளாதாரமான சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் முழு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தையும் பேரழிவுப் போரின் பிடியில் கொண்டு செல்கின்றன. உலகெங்கிலும் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுக்கக்கூடிய தொற்றுநோய்க்கு பலியாவதை மேற்பார்வையிட்ட ஆளும் வர்க்கங்கள், பிணங்களை குவிப்பதை ஒரு ஆசீர்வாதமாக மாற்றியவர்கள், உழைக்கும் மக்களிடமிருந்தும் தாழ்த்தப்பட்டவர்களிடமிருந்தும் போரின் செலவைப் பிரித்தெடுக்கின்றனர்.
போரும் சிக்கனமும் முடிவுக்கு வர வேண்டும். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், உழைக்கும் வெகுஜனங்களின் நனவான புரட்சிகர உலகளாவிய இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். அது அந்தந்த தேசிய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட வேண்டும். லியோன் ட்ரொட்ஸ்கி அற்புதமாக பகுப்பாய்வு செய்தது போல், “சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, அது சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, மேலும் உலக அரங்கில் நிறைவு பெறுகிறது.”
தற்போதைய நெருக்கடிக்கு வழி வகுத்துள்ள சமூக-பொருளாதார இயக்கவியலைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த உண்மைகள் உறுதி செய்கின்றன. அர்ப்பணிப்புக்குக் குறைவான எதுவும் தற்போதைய வர்க்கப் போராட்டங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்காது. அதன் எதிரிகள் அனைவரையும் இரக்கமற்ற முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகிறது theSocialist.LK, நாங்கள் அந்த பொறுப்பை ஏற்கிறோம்.
இணையத்தளத்தை தவறாமல் படித்து, உங்கள் கருத்துக்களை அனுப்புமாறும், அத்தியாவசிய அரசியல் விவாதங்களுக்கான திறந்தவெளியில் எங்களுடன் இணையுமாறும், இணையதளத்திற்கு உங்களின் அதிகபட்ச நிதியுதவியை வழங்குமாறும் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
[இந்த அறிக்கை முதலில் 25 மே 2023 அன்று சிங்களத்தில் வெளியிடப்பட்டது]