கொழும்பு நடவடிக்கைக் குழுவும் (CAC) மற்றும் theSocialist.LK
காசாவில் மற்றும் மேற்குக் கரையில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது ஏகாதிபத்திய ஆதரவு இஸ்ரேலிய படுகொலைகளை நிறுத்துவதற்காக இலங்கை, இஸ்ரேல் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை உடனடியாக அழைக்கவும் அணிதிரட்டவும், கொழும்பு நடவடிக்கைக் குழுவும் (CAC) மற்றும் the Socialist.LKவும் நவம்பர் 19 அன்று, இலங்கை நேரப்படி 19:00 மணிக்கு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் மீது காட்டுமிராண்டித்தனமான படுகொலையை கட்டவிழ்த்து விட்டது, இது நாசிச படுகொலைகளை உலகிற்கு நினைவூட்டுகிறது. கிட்டத்தட்ட 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அக்டோபர் 07 முதல் நான்கு வாரங்களாக தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உள்ளான குடியிருப்பு கட்டிடங்கள், அகதிகள் முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் 25000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்கள் வீசப்பட்டுள்ளன, இது கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டின் இருமடங்காகும். சியோனிச ஆட்சியானது கூட்டு படுகொலையை, மொத்த அழிவை இலக்காகக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அதை ஆதரிக்கும் அமெரிக்க-நேட்டோ அமைப்பிற்கு எதிராக உறுதியாக நிற்க முன்வந்துள்ள உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் எதிரில் ஒரு முழு அளவிலான இனப்படுகொலை நடத்தப்படுகிறது. பொலிஸ் அடக்குமுறைக்கு மத்தியிலும், பொய்ப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, இந்தோனேசியா, மலிசியா மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் இனப்படுகொலையைக் கண்டித்து, உடனடி போர்நிறுத்தத்தைக் கோரி பேரணி நடத்தி வருகின்றனர். இதை ஐக்கிய நாடுகள் சபையின் 120 நாடுகளும் அங்கீகரித்தன. நெதன்யாஹு குண்டு தாக்குதலை நிறுத்தாத நிலையில். “தன்னைத் தற்காத்துக் கொள்ள” இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு “சிவப்புக் கோடுகள்” இல்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், அதை தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே செய்ய முடியும். அமெரிக்க-நேட்டோ நாடுகளிடமோ அல்லது வலிமையற்ற ஐ.நாவிடமோ செய்யும் எந்த முறைப்பாடுகளும் சியோனிச இன அழிப்புத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வராது. தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்கு வந்துள்ளது, ஆனால் அவர்கள் ஒரு புரட்சிகர அரசியல் வேலைத்திட்டம் மற்றும் தலைமைத்துவத்துடன் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும், இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் மட்டுமே வலியுறுத்துகின்றன: “போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான போர், மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கம்தான் வழிநடத்த வேண்டும்.”
CAC மற்றும் theSocialist.LK ஆகியவை ICFI முன்வைக்கும் முன்னோக்குகளுடன் நிற்கின்றன.
இந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது நெதன்யாகு அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம், அமெரிக்க-நேட்டோ கூட்டு மற்றும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் உலகெங்கிலும் உள்ள தேசிய அரசாங்கங்களுக்கும் எதிரான போராட்டமாகும்.
இலங்கையின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இஸ்ரேலின் பக்கம் நின்று, ஒருபுறம் ஏகாதிபத்தியத்திற்கான விசுவாசத்தை வெளிப்படுத்துவது, அதன் அடக்குமுறை சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக உள்நாட்டில் பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் தாக்குதல் நீண்டகால ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான வெகுஜனக் கிளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை இந்தியாவின் மோடியைப் போலவே விக்கிரமசிங்கவும் நன்கு அறிவார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச அடக்குமுறையின் வரலாற்று மற்றும் அரசியல் அடித்தளங்களுடன் கூடிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் வேலைத்திட்டம் குறித்து நிகழ்நிலை ஆன்லைன் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் நிற்பவர்களை கூட்டத்திற்கு அழைக்கிறோம்.
Zoom ID: 890 4844 1531
Passcode: 057521